Wednesday, July 27, 2016

சிதம்பரம் ஆலயத்தில் லக்‌ஷ (1,00,000) ருத்ர ஜப பாராயணம்


சிதம்பரம் ஆலயத்தில் லக்‌ஷ (1,00,000) ருத்ர ஜப பாராயணம் 

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் முப்பெரும் விழா தொடக்கம் 

கோடி அர்ச்சனை, லக்ஷ ருத்ர ஜபம், லக்‌ஷ ஹோமம்.

கோடி அர்ச்சனை : 28.07.2016 – 15.09.2016

லக்‌ஷ ருத்ர ஜப பூர்த்தி, லக்‌ஷ ஹோமம்  & மஹாபிஷேகம் : 15.09.2016 


அன்புடையீர்,

கோயில் என்றாலே பொருள்படும் சிதம்பரத்தில் அனுதினமும் ஆடல்காட்சியை நல்கி ஆனந்தத்தை அளித்திடும் ஆடல்வல்லப் பெருமானாகிய ஸ்ரீ நடராஜ ராஜ மூர்த்திக்கு கோடி அர்ச்சனையும், லக்ஷ ருத்ர ஜபமும், லக்‌ஷ ஹோமமும், மஹாபிஷேகமும் உலக நன்மை கருதியும், மக்கள் வாழ்வாங்கு வாழவும் சிதம்பரம் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பொது தீக்‌ஷிதர்களின் மேலான வழிகாட்டுதலின் படி,  மிகச் சிறப்பாக மாபெரும் வைபவமாக  நடைபெறவுள்ளது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் – இம்மூன்றாலும் சிறப்புற்ற தலம் – சிதம்பரம். சித்+அம்பரம் = ஞானாகாசமாக அமைந்த தலம்.  உலக புருஷனின் இதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். தரிசிக்க முக்தி தரும், சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த,  பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த, வேண்டுவதை உடன் அருளும், மரண பயம் போக்கும் ஸ்தலம். 
சிவகங்கை எனும் தீர்த்தம் (குளம்) கோயிலினுள் அமைந்து கங்கைக்கு மேலான பலன்களை வழங்குகின்றது. 
ஸ்ரீ நடராஜ ராஜர் - அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்)  பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர். வேதங்கள் போற்றும் வேதநாயகர். 

அர்ச்சனை பாட்டேயாகும் - என்பது தெய்வ சேக்கிழார் வாக்கு. இறைவனை வழிபடும் வகைகளில் மிக எளியதும், வரங்களை விரைவில் வழங்கக் கோருவதிலும், தோத்திரம் எனும் வகையில் தெய்வத்தினை போற்றிடும் சிறப்பு அம்சமாக அர்ச்சனை கருதப்படுகின்றது. பல்வேறு மலர்களாலும், இலைகளாலும் தெய்வத்தின் பாதங்களில் சேர்ப்பிக்கும் அர்ச்சனை அளவில்லாத பலன்களைத் தரக்கூடியது. 
அர்ச்சனையை எண்ணிக்கைகள் கொண்டு செய்வது வழக்கத்தில் உள்ளது. 16 தெய்வப் பெயர்களைக் கொண்டு செய்யப்படுவது ஷோடச நாமாவளி என்றும், 108 கொண்டு செய்வது சதநாமாவளி என்றும், 300 கொண்டு அர்ச்சிப்பது திரிசதி என்றும், 1008 கொண்டு வழிபடுவது ஸஹஸ்ரநாமம் என்றும் அழைக்கப்படும். 
இதில் ஸஹஸ்ரநாமாவளிக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அதிலும் நடராஜ ராஜரை துதிக்கும் நடேச ஸஹஸ்ரநாமம் பற்பல விசேஷங்கள் கொண்டது. 
இந்த ஸஹஸ்ரநாமத்தைக் கொண்டு 100 முறை அர்ச்சித்தால் அது லக்‌ஷார்ச்சனை எனப்படும். 
கோடி அர்ச்சனை : காலை & மாலை இரு வேளைகளில் 50 நாட்களுக்கு  லக்‌ஷார்ச்சனை செய்தால் அது கோடி அர்ச்சனை என்ற கணக்கில் அமையும்.

லக்‌ஷ ருத்ர ஜபம் : 
நமது இந்து சனாதன மதத்திற்கு ஆதராமாக விளங்குவது ரிக், யஜுர், ஸாமம் மற்றும் அதர்வணம் எனும் நான்கு வேதங்கள். யஜுர் வேதத்தின் மையப்பகுதியாகவும்,  வேதத்தின் சாரமாகவும், சைவத்தின் மிக உயர் நிலை தெய்வமாக விளங்கும் சிவபெருமானையே முழுவதும் போற்றுவதும் ஆக திகழ்வது ஸ்ரீ ருத்ரம் எனும் மிகப் பலம் வாய்ந்த அற்புத பலன்கள் தரும் அரிய மந்திரத் தொகுப்பு. 
ஸ்ரீருத்ரம் - யஜுர் வேத தைத்திரீய சம்ஹிதையின் ஏழு காண்டங்களுள் நாலாவது காண்டத்தின் நடுநாயகமாக அமைந்துள்ளது. 
சிவநேயர்களின் இறைகோஷமாக எப்பொழுதும் சொல்லப்படுதும், சைவத் திருமறைகள் அற்புதமாக போற்றுவதும் (நமசிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க) ஆகிய 'நமசிவாய' எனும் ஐந்தெழுத்தை தன்னுள் கொண்டது ஸ்ரீ ருத்ரம். (நமசிவாயச நமசிவாய)
ஸ்ரீருத்ரம் - ருத்ரோபநிடதம் என்றும் சதருத்ரீயம் என்றும் சிறப்புப் பெயர் வாய்ந்தது. வாழ்க்கை எனும் துயரக்கடலிருந்து நம்மை விடுவித்து முக்திக்கு கருவியானதால் இது உபநிடதம் என்று அழைக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான வடிவங்களில் ஸ்ரீ ருத்திரனை இந்நூலில் போற்றப்படுவதாலும் இதனை சதருத்ரீயம் எனப்படுகிறது.
ஸ்ரீருத்ரத்தை ஜபம் செய்வதைக் கேட்பதால் கிடைக்கும் பயன் விரும்பிய வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும். நினைத்த காரியங்கள் ஈடேறும். ருத்ர ஜெபத்தால் எல்லா தேவதைகளும் திருப்தி அடைகின்றனர் என்று சூதசம்ஹிதை கூறுகிறது. மேலும் ஸ்ரீ ருத்ரமே அனைத்து பாவங்களுக்கும் சிறந்த பரிகாரமாகவும் கூறப்பட்டுள்ளது.
இவையனைத்தும் ஒரு முறை ஸ்ரீ ருத்ர மந்திரத்தினைக் கேட்பதால் கிடைக்கும் பலனாகும். 
உலகிலேயே முதல் முறையாக, பிரபஞ்ச நாயகராக விளங்கும் ஸ்ரீ நடராஜ மூர்த்தி விளங்கும் தில்லைச் சிதம்பர ஆலயத்தில், 100 தீக்‌ஷிதர்கள் கொண்டு, 50 நாட்களில் - காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் - ஒரு லக்‌ஷம் முறை பாராயணம் செய்யப்படவுள்ளது. 

லக்‌ஷ ஹோமம் : ஒரே நேரத்தில் நூறு பூஜகர்கள் நடேச ஸஹஸ்ரநாமாவளிகளை (100x1000=1,00,000) ஹோமம் செய்வது லக்‌ஷ ஹோமம் ஆகும்.


மஹாபிஷேகம் : அபிஷேக பிரியரான நடராஜப் பெருமானுக்கு விபூதி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், இளநீர், சந்தனம், திரவியப்பொடி, மஞ்சள்தூள் முதலான பொருட்கள் கொண்டும், பல்வேறு புஷ்பங்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியும் செய்வது ஸகல திரவிய மஹாபிஷேகம் ஆகும். 

கோடி அர்ச்சனை : 28.07.2016 – 15.09.2016

லக்‌ஷ ஹோமம் & மஹாபிஷேகம் : 15.09.2016 

நற்குழந்தைப் பேறு, பாலாரிஷ்ட தோஷ நிவர்த்தி (குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் நீங்குதல்), குழந்தைகளின் கல்வி மேம்பாடு,நல்ல ஞாபக சக்தி, தேர்வுகளின் நன்மதிப்பெண்கள் பெறுவது, கற்ற கல்விக்கேற்ற உத்யோகம்,உத்யோக உயர்வு, வியாபாரத்தில் பெருலாபம், சுப திருமண யோகம், நல்ல இல்லற வாழ்க்கை, நோயற்ற நீடித்த நல்வாழ்வு, வம்ச அபிவிருத்தி, ஸகல ஸெளபாக்கியங்கள், பித்ரு தோஷ நிவர்த்தி, முன்னோர்கள் பூரண ஆசீர்வாதம், நவக்ரஹ ஜாதக தோஷ நிவர்த்தி மற்றும் வேண்டும் வரங்களை மிக விரைவில் வழங்கிடும் இந்த மஹா மஹா வைபவத்தில் பக்தர்கள் அனைவரும் பங்கு கொண்டு, ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேத ஸ்ரீமன் ஆனந்த நடராஜ ராஜ மூர்த்தியின் பரிபூரண அருளால் அனைத்து பயன்களையும் பெற வேண்டுகின்றோம்.

பக்தர்கள் அனைவரும் இந்த மாபெரும் காணுதற்கரிய இந்த மாபெரும் வைபவத்தினை தரிசித்து வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறக் கோருகின்றோம். 

நி.த. நடராஜ தீக்‌ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
செல் : 9443479572, 9362609299.
Mail : yanthralaya@gmail.com
http://natarajadeekshidhar.blogspot.in
www.facebook.com/deekshidhar


தனித்தனியாக கட்டுரைகளை வாசிக்க, கீழேயுள்ள லிங்க்-களை க்ளிக் செய்தும் படிக்கலாம்.

**************************************************
**************************************************
**************************************************

&